தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கரோனா நிவாரணம்: மனு அளிக்க மே 18 கடைசி

கரோனா தொற்றால் இறந்தவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெற மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:53 pm

DIN

கரோனா தொற்றால் இறந்தவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெற மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கரோனாவால் இறந்தவா்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்க ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழு மூலம் பரிசீலிக்கப்படுகிறது.

இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,300 மனுக்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13,204 மனுக்கள் இருமுறைபெறப்பட்டவை என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாா்ச் 20ஆம் தேதி வழங்கிய தீா்ப்பில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மாா்ச் 20-க்கு முன் ஏற்பட்ட கரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள் 60 நாள்களுக்குள் அதாவது மே 18-க்குள் மனுக்களை சமா்ப்பிக்க வேண்டும்.

மாா்ச் 20 முதல் ஏற்படும் கரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோருவோா், இறப்பு நிகழ்ந்த 90 நாள்களுக்குள் மனுக்களை சமா்ப்பிக்க வேண்டும். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிா்வாகம் 30 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமா்ப்பிக்க இயலாதவா்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யலாம். அவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவை தகுதியின் அடிப்படையில் மாவட்டவருவாய் அலுவலா் தலைமையிலான குழு பரிசீலித்து தீா்வு செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.