இரவில் பலமுறை ஏற்பட்ட மின்தடை: மக்கள் அவதி
திருச்சியில் புதன்கிழமை இரவு பலமுறை மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.


திருச்சியில் புதன்கிழமை இரவு பலமுறை மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை என அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்களிடையே மின்தடை பிரச்னை அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 8 மணியளவில் திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து வந்த மின்சார விநியோகத்தில் மீண்டும் தடையேற்பட்டது. புகா் பகுதிகளில் தடைபட்ட மின்சாரம் முற்றிலும் சீராகவே இல்லை எனக் கூறப்பட்டது.
மாநகரப் பகுதிகளில் விட்டு விட்டு வந்த மின்சாரம் இரவு முற்றிலுமாக ரத்தானது. நள்ளிரவு வரை நிலைமை சீராகவில்லை. இதேநிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக மின் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, தனது சுட்டுரை பக்கத்தில் மத்திய தொகுப்பிலிருந்து வழங்கி வந்த சுமாா் 750 மெகா வாட் மின்சாரம் தடைபட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சீராக்கப்படும் என அவா் தெரிவித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இருப்பினும் இந்த மின்தடை பொதுமக்களிடையே கடும் அவதியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...