புனித தோமையார் திருவிழா: டிஜிட்டல் முறையில் இயேசுவின் பாடுகளின் பாஸ்கா

மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி புனித தோமையார் திருமலைத் திருத்தலத்தின் பாஸ்கா பெருவிழா மற்றும் புனித தோமையார்
புனித தோமையார் திருவிழா: டிஜிட்டல் முறையில் இயேசுவின் பாடுகளின் பாஸ்கா
Published on
Updated on
1 min read

மணப்பாறை: மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி புனித தோமையார் திருமலைத் திருத்தலத்தின் பாஸ்கா பெருவிழா மற்றும் புனித தோமையார் திருவிழா தொடங்கியுள்ளது. இதில் முதல் நாள் பாஸ்காவாக, டிஜிட்டல் முறையில் ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் பாஸ்காவும், அதனைத்தொடர்ந்து தூம்பா பவனியும் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி புனித தோமையார் திருமலைத் திருத்தலத்தின் பாஸ்கா பெருவிழா மற்றும் புனித தோமையார் திருவிழா தொடங்கியுள்ளது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் பாஸ்காவாக, டிஜிட்டல் முறையில் ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் பாஸ்காவும், அதனைத் தொடர்ந்து தூம்பா பவனியும் நடைபெற்றது. திருச்சி மறைமாவட்ட குருகுல முதல்வர் அந்துவான் பாஸ்காவைத் தொடங்கி வைத்தார். 

பாடுகளின் பாஸ்காவில், தேவ தூதனாகிய இயேசு, திருமுழுக்கு யோவான் என்பவரிடம் திருமுழுக்கு பெறுகிறார். அதனைத்தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கும் ஊழியத்தை தொடங்கிய இயேசு சாத்தான்களை வெல்கிறார். குருடர், முடவர், நோயாளி ஆகியோரை குணப்படுத்துகிறார். இயேசு ஹோசானா பாடலுடன் கைகளில் தென்னங்குருத்தினை ஏந்தி நகர் வலம் வருகிறார். 

இதற்கிடையே மத குருமார்களிடன் இயேசுவை காட்டிக்கொடுக்க யூதாஸ் 30 வெள்ளிக்காசுகளை பெறுகிறார். அதனைத் தொடர்ந்து பெரிய வியாழன் அன்று இறுதி இராவுணவு தனது சீடர்களுடன் அருந்துகிறார் இயேசு. அப்போது பதற்றமாகவே யூதாஸ் காணப்படுகிறார். உங்களின் ஒருவன் என்னை காட்டிக்கொடுப்பான் என கூறி, பின் தனது சரீதம் அப்பம் எனவும், தனது இரத்தம் திராட்சை ரசம் என்றும் சீடர்களிடம் அளிக்கிறார். 

கடைசியாக அப்பத்தை பெற்ற யூதாஸ் அதை வீசி எரிந்துவிட்டு செல்கிறார். பிதாவிடம் பிராத்தனை செய்துக்கொண்டிருக்கும் இயேசுவை முத்தமிட்டு யூதாஸ் வீரர்களிடம் காட்டிக்கொடுகிறார். அரசவையில் பலமுறை நிராகரிக்கப்பட்டு பின் இயேசுவை சிலுவையில் ஏற்றி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இயேசு சிலுவையை சுமந்து செல்கிறார். பின் கல்வாரி மலையில் சிலுவையில் ஏற்றி இயேசுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 

இவ்வாறு முதல் நாள், இயேசுவின் பாடுகளில் பாஸ்கா டிஜிட்டல் முறையில் பின் திரைகள் அமைத்து நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com