மணப்பாறை: மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி புனித தோமையார் திருமலைத் திருத்தலத்தின் பாஸ்கா பெருவிழா மற்றும் புனித தோமையார் திருவிழா தொடங்கியுள்ளது. இதில் 2-வது நாள் பாஸ்காவாக, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பாஸ்கா-வும், அதனைத் தொடர்ந்து இரத பவனியும் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி புனித தோமையார் திருமலைத் திருத்தலத்தின் பாஸ்கா பெருவிழா மற்றும் புனித தோமையார் திருவிழா தொடங்கியுள்ளது. நான்கு நாள்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் நாள் டிஜிட்டல் முறையில் ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் பாஸ்கா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 2-வது நாள் வெள்ளிக்கிழமை இரவு ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பாஸ்கா-வும், அதனைத்தொடர்ந்து இரத பவனியும் நடைபெற்றது. மணப்பாறை உதவி பங்குத்தந்தை செல்வ ஜெயமணி இரத மந்திரிப்பு செய்தார்.
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பாஸ்காவில், தேவ தூதனாகிய இயேசுவிற்கு, கல்வாரி மலையில் சிலுவையில் ஏற்றி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து நரகத்தில் சாத்தான்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வாரி மலையில் இயேசுவின் சரீதம் உள்ள கல்லறைக்கு யூத மத குருமார்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க காவல் போடப்படுகிறது. மூன்றாம் நாள் இறை தூதர் இயேசு உயிர்தெழுந்தார்.
அதனைத்தொடர்ந்து அன்னை மரியாள் மற்றும் சீடர்களுக்கு காட்சி தருகிறார். மீனவர்களுக்கு உதவி செய்கிறார் இயேசு. பேதுரு, சீடருக்கு ஆடுகள் மெய்ப்பு பணியினை ஒப்புவிக்கிறார். இவ்வாறு 2-ஆம் நாள் இயேசுவின் உயிர்ப்பு பாஸ்கா, கலைஞர்களால் தத்துரூபமாக நடித்து நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர், நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.