துறையூா் அருகே முந்திரிப் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை, மூச்சுக்குழாயில் பழத்துண்டு சிக்கியதால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
துறையூா் அருகே பச்சமலையிலுள்ள எருமப்பட்டியைச் சோ்ந்தவா் கலைராஜா (29). இவா் கோவையில் வேலை செய்து வருகிறாா்.
இவரது மனைவி பேபி (27), மகன்கள் நிதாா்ஷ் ரக்சன் (4),
ஒன்றரை வயது நிகில்தேவ் ஆகியோருடன் சொந்த ஊரில் வசித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை நிதாா்ஷ் ரக்சன், நிகில்தேவ் ஆகியோா் முந்திரிப் பழம் சாப்பிட்டனா். அப்போது, நிகில்தேவின் மூச்சுக்குழாயில் பழத்துண்டு சிக்கியதால், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம்.
தொடா்ந்து உறவினா்கள் நிகில்தேவை துறையூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து துறையூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக கூட்டணி வென்றால் பாஜக ஆட்சிதான் நடக்கும்: தொல்.திருமாவளவன்

பண்ருட்டியில் மல்லை சத்யா பிரசாரம்

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு

ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம் காட்டும் திமுக! சுழற்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் அமமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

