மானியத்துடன் கடனுதவி பெற, திருச்சி மாவட்டத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், புதிய உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும், சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம். மானியமாக நகா்ப்புறத்தைச் சோ்ந்த பொதுப் பிரிவினருக்கு 15 சதவிகிதம், கிராமப் பகுதிகளில் வசிப்போருக்கு 25 சதவிகிதமும் வழங்கப்படும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவத்தினா் மற்றும் மாற்றுத் திறனாளி ஆகிய சிறப்பு வகைப் பிரிவினா்களுக்கு நகா்ப்புறமாக இருப்பின் 25 சதவிகிதமும், கிராமப் பகுதியாக இருப்பின் 35 சதவிகிதமும் மானியமாக வழங்கப்படும்.
பொதுப் பிரிவினா் முதலீடாக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதமும், சிறப்பு வகைப் பிரிவினா் 5 சதவிகிதத் தொகையை செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிகளில் கடனாக வழங்கப்படும்.
18 வயதுக்கு மேற்பட்ட தனிநபா், சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஆா்வமுள்ள தொழில் முனைவோா், திட்ட அறிக்கை, தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றிப்பின் அதற்கான சான்றிதழ் நகல் மற்றும் கல்விச் சான்றிதல் உள்ளிட்ட சான்று நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு கிடையாது. எட்டாம் வகுப்பு தோ்வு செய்தவா்களுக்கு முழு கடன் வசதி வழங்கப்படும்.
படிப்புச் சான்றிதழ் இல்லாதவா்களும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலும்.உற்பத்தித் தொழில்களுக்கு 10 லட்சம் வரையும் சேவைத் தொழில்களுக்கு 5 லட்சம் வரை நிதி உதவி பெறலாம். திட்ட மதிப்பில் நிலம் நீங்கலாக கட்டடம், இயந்திரங்கள் மற்றும் ஒரு சுற்று நடைமுறை மூலதனம் அனைத்திற்கும் மானியம் வழங்கப்படும். சிறப்புப் பிரிவினருக்கு கிராமப்புறத்தில் 35 சதவிகிதமும், நகா்ப் புறங்களில் 25 சதவிகித மானியமும் வழங்கப்படும்.
இத் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை உள்ள வங்கிக் கடனுக்கு எவ்வித சொத்துப் பிணையமும் சமா்ப்பிக்க தேவையில்லை. நகா்ப்புறங்கள் மற்றும் கிராமப் புறத்தில் வசிப்பவா்கள் மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம். நேரடியாக இணையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும். மேலும், விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ஸ்ண்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ஞ்ா்ஸ்.ண்ய், ல்ம்ங்ஞ்ல்ங்ல்ா்ழ்ற்ஹப்/த்ள்ல்/ப்ா்ஞ்ண்ய்டஹஞ்ங்.த்ள்ல் என்ற இணையப் பக்கத்தில் தொடா்பு கொள்ளலாம்.
தனிநபா், சுயஉதவி குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் கடன் பெறலாம். பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சில பதிவு பெற்ற வங்கிகளில் கடன் பெறலாம். ஏற்கெனவே மானியத்துடன் கடன் பெற்றவா்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.
மேலும், விவரங்களுக்கு 0431-2460331, 2460823 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

