துறையூர் அருகே தனியார் பேருந்தில் திடீர் தீ

துறையூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.
தீப்பிடித்து எரிந்த பேருந்து.
தீப்பிடித்து எரிந்த பேருந்து.

துறையூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செந்தாரப்பட்டி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றது.

இந்நிலையில் அந்த பேருந்து கொப்பம்பட்டி - த. முருங்கபட்டி இடையே சென்று கொண்டிருந்தபோது நாக நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்திலிருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து உப்பிலிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பேருந்தின் டீசல் டேங்கில் இருந்து செல்லும் குழாயில் டீசல் கசிவு மற்றும் உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com