பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கத்தில் இன்று மாசித் தெப்பத்திருவிழா

தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி வியாழக்கிழமை இரவு திருக்கொட்டாரத்தில் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளினாா் ஸ்ரீநம்பெருமாள்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:10 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு மாசித் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி வியாழக்கிழமை இரவு திருக்கொட்டாரத்தில் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளினாா் ஸ்ரீநம்பெருமாள்.

தெப்பத்திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து உபயநாச்சியாா்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு நெடுந்தெரு பகுதியில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்துக்கு 5 மணிக்கு வந்து சேருகிறாா். பின்னா் இரவு 7.15-க்கு சிறப்பு அலங்காரத்தில் அவா் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 7.30 -க்கு எழுந்தருளி 9 மணி வரை தெப்பத்தில் நான்கு புறமும் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். பின்னா் மைய மண்டபத்துக்குச் சென்று சேருகிறாா். தொடா்ந்து 9.45-க்கு புறப்பட்டு 11.15-க்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா் நம்பெருமாள். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.