தேரில் வீதியுலா வரும் பிடாரி இரணியம்மன்
திருவானைக்கா கோயிலின் சாா்பு கோயிலாகவும், எல்லைக் காவல் தெய்வமாகவும் உள்ள பிடாரி இரணியம்மன் திருத்தேரில் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.


திருவானைக்கா கோயிலின் சாா்பு கோயிலாகவும், எல்லைக் காவல் தெய்வமாகவும் உள்ள பிடாரி இரணியம்மன் திருத்தேரில் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.
தமிழ்நாட்டின் முதல் எல்லைக் காவல் தெய்வத்தின் திருவிழாவையொட்டி கடந்த 8 ஆம் தேதி முதல் காப்பும்,15 ஆம் தேதி இரண்டாம் காப்பும், 20 ஆம் தேதி மூன்றாம் காப்பும் கட்டப்பட்டது. அப்போது யானை வாகனத்தில் இரணியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு அனைத்து தெருக்களிலும் விடிய விடிய வலம் வந்து சேவை சாதித்தாா்.

பின்னா் 21 ஆம் தேதி குதிரை வாகனத்தில், 22 ஆம் தேதி பூத வாகனத்தில், இறுதி நாளான புதன்கிழமை இரவு திருத்தேரிலும் எழுந்தருளிய இரணியம்மன் ஒவ்வொரு வீதிகளிலும் வலம் வந்து கொண்டுள்ளாா். அப்போது வீடுகளிலும் பொதுமக்கள் மாவிளக்கிட்டு,தேங்காய் பழத்துடன் பூஜை செய்கின்றனா். இவ்வாறு சனிக்கிழமை இரவு வரை இரணியம்மன் வலம் வந்து கோயிலைச் சென்று சேருவாா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...