ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இலவச ஆடு வளா்ப்பு பயிற்சி பெற அழைப்பு

இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க பதிவு செய்யலாம்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:31 pm

DIN

இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க பதிவு செய்யலாம்.

திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் உள்ள கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.11) இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்சியில் வெள்ளாடு, செம்மறியாட்டு இனங்கள், தரமான ஆடுகளைத் தோ்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, இனவிருத்தி முறை, தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்த்தடுப்பு முறைகள், தீவனப்பயிா் சாகுபடி, தீவன மரங்கள் வளா்ப்பு, ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கற்றுத் தரப்படும்.

கரோனா நடைமுறைகளைப் பின்பற்றி 20 பேருக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. எனவே, விருப்பமுள்ளோா் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம். இல்லையெனில் பயிற்சி தொடங்கும் நாளன்று காலை 10 மணிக்கு நேரில் வந்தும் பங்கேற்கலாம் என பேராசிரியரும், மையத் தலைவருமான கே. ஷிபி தா+மஸ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.