சார்தாம் யாத்திரையின்போது உணவகங்களுக்கு சுமார் 20 லட்சம் வணிக மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் தேவைப்படுவதாக சார்தாம் யாத்திரையின் நிர்வாக அமைப்பின் சிறப்பு அதிகாரி பிரஜாபதி நௌடியால் தெரிவித்தார்.
தனியார் செய்தி நிறுவனத்துடனான பிரத்யேக அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
எல்பிஜியின் தேவை குறித்த அறிக்கை ஏற்கெனவே அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் சார்தாம் யாத்திரையை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சுற்றுலாத் துறை செயலாளரின் அறிவுறுத்தலின்பேரில், 2025-ஆம் ஆண்டு சார்தாம் யாத்திரையின் மே மற்றும் ஜூன் மாதங்களில் பயன்படுத்தப்பட்ட வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு எண்ணிக்கை குறித்த தரவுகளைக் கோரினோம். அந்த தரவுகளின்படி, சுமார் 16 லட்சம் எல்பிஜி சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தரகண்டில் நடைபெறும் சார்தாம் யாத்திரையின்போது, அமைந்துள்ள 7 மாவட்டங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் தாபாக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 20 லட்சம் வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுகின்றது.
கடந்த ஆண்டு, யாத்திரை தொடங்கிய முதல் இரண்டு மாதங்களிலேயே, மொத்தம் 16,41,149 வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன.
உத்தரகண்டில் நடைபெறும் சார்தாம் யாத்திரை ஏப்ரல் முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 19-ஆம் தேதி யமுனோத்ரி, கங்கோத்ரி ஆலயங்களின் நடை திறக்கப்படுவதன் மூலம் இந்த யாத்திரை தொடங்கும்.
ஸ்ரீ கேதார்நாத் மற்றும் ஸ்ரீ பத்ரிநாத் ஏப்ரல் 22, ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்தாண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
Summary
Prajapati Naudiyal, Special Officer of the Char Dham Yatra Administration, stated that approximately 2 million commercial and domestic LPG cylinders would be required by restaurants—ranging from small to large—during the Char Dham Yatra.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இலவச சமையல் எரிவாயு சாத்தியமே...

நிலச்சரிவால் சார்தாம் யாத்திரை இரு நாள்கள் நிறுத்தம்!

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை! "பஹந்தி" சடங்கு தொடக்கம்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly




