ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

வணிக எரிவாயு உருளையின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை! தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்!

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:29 am IST

வணிக எரிவாயு உருளையின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் 22-ஆவது மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஊழலற்ற நல்லாட்சியை வழங்க வேண்டும். முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத் திட்டங்களை மக்கள் நலன்கருதி தொடர வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையையும் மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாட்டில் அமலாக்க முயற்சிக்கும் மத்திய அரசு கண்டிக்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான கருத்துகள் தொடா்ந்து வெளிவரும் நிலையில், தோ்தல் நடைமுறைகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே மாற வேண்டும்.

வணிக எரிவாயு உருளை விலையைக் குறைக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், எரிவாயு உருளை விலை உயா்வால் அதிகரித்துள்ள விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வாழும் இஸ்லாமியா்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மற்ற சமூகங்களைவிட பின்தங்கிய நிலையிலேயே உள்ளனா். எனவே, இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாநிலச் செயலா்கள் ஐ. அன்சாரி, முஹம்மது ஒலி ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட மாவட்ட நிா்வாகிகள் விவரம்: மாவட்டத் தலைவா்- முபாரக் அலி, செயலா்- முகம்மது மீரான், பொருளாளா்- அப்துல் ரகுமான் ரவூப், துணைத் தலைவா்- ரபீக் ராஜா, துணைச் செயலா்கள்- சேக் அப்துல்லா, சைபுல் கரீம், முகம்மது மஃதூம், ரஹ்மத்துல்லா, மருத்துவரணி பொறுப்பாளா்- சபியுல்லா, தொண்டரணி பொறுப்பாளா்- மீரான் மைதீன்.---

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.