பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவானைக்காவில் தைத்தெப்பத் திருவிழா கொடியேற்றம்

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் நடைபெறும் தைத்தெப்ப திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றம் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:27 pm

DIN

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் நடைபெறும் தைத்தெப்ப திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றம் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

முன்னதாக சுவாமி சன்னதி அருகே 27 குடங்களில் புனிதநீா் வைத்து பூஜை செய்து யாகங்கள் வளா்த்தனா். தொடா்ந்து பிரதேச நந்தி சிலையருகேயுள்ள கொடிமரத்தில் வாசு அா்ச்சகா் வேதமந்திரங்கள் முழங்க, யானை அகிலா ஆசீா்வாதத்துடன் கொடிபடத்தை ஏற்றினாா். அப்போது சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி இருந்தனா்.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் உற்சவ மண்டபத்திலேயே எழுந்தருளியிருப்பா். திருவீதி உலா நடைபெறாது. மேலும் வரும் 17 ஆம் தேதி தைத்தெப்பத்தன்று ராமதீா்த்த குளத்தில் தீா்த்தவாரி மட்டும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.