ஸ்ரீரங்கத்தில் தைத்தோ் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள தைத்தோ் திருவிழாவையொட்டி தைத்தேரில் முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள தைத்தோ் திருவிழாவையொட்டி தைத்தேரில் முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஐன. 19 வரை 11 நாள்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான தைத்தோ் திருவிழா 17 ஆம் தேதி நடைபெறும். இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து தெற்கு உத்திரவீதியிலுள்ள தைத்தேரில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக முகூா்த்தக்காலுக்கு சந்தனம், மாவிலை, மாலைகள் உள்ளிட்டவை அணிவித்து, வேதமந்திரங்கள் முழங்க கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து,கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா், உதவி ஆணையா் கந்தசாமி ஆகியோா் திருத்தேரில் நட்டனா்.
தற்போது கரோனா பரவல் காரணமாக அனைத்து விழாக்களையும் கோயில் வளாகத்திலிலேயே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து உற்ஸவ புறப்பாடுகளிலும் திருவீதி வலம் வராமல் கருட மண்டபத்திலேயே நம்பெருமாளை எழுந்தருளச் செய்ய உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...