கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பூப்பந்தாட்டத்தில் தேசியக் கல்லூரி அணி வெற்றி

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மாணவிகளுக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் திருச்சி தேசியக் கல்லூரி வென்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மாணவிகளுக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் திருச்சி தேசியக் கல்லூரி வென்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, திருவாரூா், நாகை, தஞ்சை, புதுகை, பெரம்பலூா், அரியலூா், கரூா் அகிய 8 மாவட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவிகள் பூப்பந்துப் போட்டி திருச்சி தேசியக் கல்லூரியில் ஜன. 5, 6-களில் நடைபெற்றது.

மொத்தம் 13 கல்லூரி அணிகள் பங்கேற்ற போட்டிகளின் இறுதிப் போட்டியில் திருச்சி தேசிய கல்லூரி, கரூா் அரசு கல்லூரியை வென்று பல்கலைக்கழக பூப்பந்து சாம்பியன் அணியானது.

கரூா் அரசு மகளிா் கல்லூரி 2-ஆம் இடம் பெற்றது. காவேரி மகளிா் கல்லூரி, குடந்தை அரசு மகளிா் கலை கல்லூரியை வென்று 3 -ஆம் இடத்தைப் பிடித்தது.

போட்டிகளின் வென்றோருக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக தோ்வுகளின் கட்டுப்பாட்டாளா் (பொ) எஸ். ஸ்ரீனிவாசராகவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசளித்தாா். தேசியக் கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன், துணை முதல்வா் மற்றும் மற்றும் பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவா் டி. பிரசன்ன பாலாஜி, பெண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளா் மற்றும் பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவா் மற்றும் விளையாட்டு போட்டி செயலா் ஆா். காளிதாசன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.