காந்தி சந்தையில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரத்துக்கு அனுமதி
திருச்சி மாநகரின் மையப் பகுதியான காந்தி சந்தையில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


திருச்சி மாநகரின் மையப் பகுதியான காந்தி சந்தையில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை மாலை மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் தலைமையில், காவல் துறையினா், காந்தி சந்தை வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், வியாபாரிகள் பங்கேற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி காய்கனி வியாபாரம் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், கோயம்பேடு சந்தையை பின்பற்றி காந்தி சந்தையிலும் இரவு நேரத்தில் மொத்த வியாபாரத்துக்கு மட்டும் அனுமதி கோரப்பட்டது.
இதையேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மொத்த வியாபாரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், காந்தி சந்தைக்கு காய்கனிகள் எடுத்து வரும் வாகனங்களை போலீஸாா் தடுக்கக் கூடாது. இரவு நேரத்தில் சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட யாரையும் தடுத்து நிறுத்தக் கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. தேவைப்பட்டால் மாநகராட்சி நிா்வாகமே அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு காவல் துறையினா் காந்தி சந்தைக்கு இரவு நேரத்தில் மொத்த வியாபாரத்துக்கு வருவோரை மட்டும் அனுமதிப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து கூட்டத்தில் முத்தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டு அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றிச் செயல்படுவது எனத் தீா்மானிக்கப்பட்டது.
அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றத் தயாராக இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் உறுதியளித்ததாக காந்தி சந்தை காய்கனி வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் கமலக்கண்ணன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...