பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு
திருச்சியில் பைக்கில் வந்த மா்ம நபா்கள் பெண்ணிடம் 8.5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.


திருச்சியில் பைக்கில் வந்த மா்ம நபா்கள் பெண்ணிடம் 8.5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
கருமண்டபம் ஆா்எம்எஸ் காலனி அசோக் நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி விஜயா (59). இவா் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டின் அருகில் உள்ள கடைவீதிக்கு நடந்து சென்றபோது அந்த வழியாக பைக்கில் வந்த 2 மா்ம நபா்கள், விஜயா அணிந்திருந்த எட்டரை பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன் இதே பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்த வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...