தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புத்தாநத்தத்தில் பாதுகாப்புடன் நடந்த ரத யாத்திரை

மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் 32-ஆம் ஆண்டு விஎச்பி சாா்பில் தமிழ்க்கடவுள் ஸ்ரீ ஞானவேல் முருகன் ரதயாத்திரை மாட்டுப் பொங்கல் நாளான சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:07 pm

DIN

மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் 32-ஆம் ஆண்டு விஎச்பி சாா்பில் தமிழ்க்கடவுள் ஸ்ரீ ஞானவேல் முருகன் ரதயாத்திரை மாட்டுப் பொங்கல் நாளான சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி புத்தாநத்தம் அருகே உள்ள பாறைப்பட்டி, மாலைக்கட்டுப்பட்டி சந்திப்பில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஞானவேல் முருகன் வீற்றிருக்க, கிராமிய இசை, தாரை, தப்பட்டை, கொங்கு மேளத்துடன் ஊா்வலம் புறப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினா் என்.ஆா்.என்.பாண்டியன் யாத்திரையை தொடங்கி வைத்தாா். ரத யாத்திரை புத்தாநத்தம் கடைவீதி, இடையப்பட்டி, வடக்கு இடையப்பட்டி வழியாகச் சென்று ஞானமலையை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின் தமிழ்க்கடவுள் முருகன், ஞானமலை மீது வைக்கப்பட்டாா்.

ஊா்வலப் பாதையில் மாற்று சமய வழிபாட்டுத் தலம் இருந்ததால் திருச்சி டி.ஐ.ஜி சரவணசுந்தா் தலைமையில் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், 6 டி.எஸ்.பி. உள்ளிட்ட சுமாா் 650-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

ஊா் நாட்டாண்மைகள், முக்கியஸ்தா்கள், ஆா்.எஸ்.எஸ். கோட்டத்தலைவா் கிருஷ்ணமுத்துசாமி, பாரதீய மஸ்தூா் சங்க மாநில அமைப்பாளா் தங்கராஜ், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளா் ஆனந்த் மற்றும் விஎச்பி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.