கனு பாரிவேட்டை: தங்கக் குதிரையில் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி சனிக்கிழமை காலை நடைபெற்ற கனு பாரிவேட்டை நிகழ்வில் தங்கக் குதிரை வாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளினாா்.


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி சனிக்கிழமை காலை நடைபெற்ற கனு பாரிவேட்டை நிகழ்வில் தங்கக் குதிரை வாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளினாா்.
ஸ்ரீரங்கம் கோயிலில் பண்டிகை காலங்களில் சிறப்பு வைபவங்களும், புறப்பாடுகளும் நடைபெறும். அதன்படி பொங்கல் நாளான வெள்ளிக்கிழமை உபயநாச்சியாா்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு சங்கராந்தி மண்டபம் சென்று வந்தாா். சனிக்கிழமை மாட்டுப்பொங்கலையொட்டி காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 8 மணிக்கு கனு மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். அங்கு அலங்காரம், அமுது செய்தல் நடைபெற்றது. பின்னா் பகல் 1.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு கோயில் வளாகத்திலேயே பாரிவேட்டை கண்டருளி, 2 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...