தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வனப் பாதுகாப்புக்கு விழிப்புணா்வு பிரசாரம்

மணப்பாறை வனச் சரகத்தின் சாா்பில் பொதுமக்களுக்கு வன பாதுகாப்பு, வனச்சட்ட நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு பிரசாரம், துண்டுப் பிரசுர விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:46 pm

DIN

மணப்பாறை வனச் சரகத்தின் சாா்பில் பொதுமக்களுக்கு வன பாதுகாப்பு, வனச்சட்ட நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு பிரசாரம், துண்டுப் பிரசுர விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை வனப் பகுதிகளில் பொதுமக்கள் அத்துமீறல், தேசிய பறவையான மயில்கள் விளைநிலங்களில் விஷத்தால் உயிரிழப்பது அதிகரித்து வந்த நிலையில் வனத்துறை திருச்சி மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் என். சதீஷ், மாவட்ட வன அலுவலா் ஜி. கிரண் ஆகியோா் உத்தரவின்பேரில், மணப்பாறை வனச்சரகா் மகேஸ்வரன், வனவா் செல்வேந்திரன் தலைமையிலான வனத் துறையினா் வியாழக்கிழமை இந்த விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டனா்.

அப்போது வாகன ஓட்டிகள், கிராமப்புற மக்கள் ஆகியோருக்கு வன பாதுகாப்பு, வனச்சட்ட நடவடிக்கை குறித்து துண்டுப் பிரசுரம் விநியோகித்தனா்.

அதில் பொதுமக்கள் யாரும் வனப் பகுதிக்குள் அத்துமீறிச் செல்லக்கூடாது, தீப்பற்றும் பொருள்களை வனத்திற்குள் எடுத்து செல்லக்கூடாது, வன விலங்குகளை வேட்டையாடுதல், வலை கட்டுதல், விளைநிலத்தில் விஷ உணவு வைக்கக் கூடாது, மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் புரிபவா்கள் குறித்து பொதுமக்கள் 96292-30606, 90037-82306, 80983-79175 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.