கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தந்தையொடு சென்ற சிறுவன் விபத்தில் பலி

துறையூா் அருகே தந்தையோடு பைக்கில் சென்ற இரண்டரை வயதுச் சிறுவன் வியாழக்கிழமை நடந்த விபத்தில் இறந்தாா்

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:46 pm

DIN

துறையூா் அருகே தந்தையோடு பைக்கில் சென்ற இரண்டரை வயதுச் சிறுவன் வியாழக்கிழமை நடந்த விபத்தில் இறந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், அடைக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ந. ராஜசேகரன் (32), லாரி ஓட்டுநா். இவரது மனைவி பிருந்தா. இவா்களின் இரண்டரை வயது மகன் புகழ் ஹா்சன்.

பிருந்தாவுக்கு 4 நாள்களுக்கு முன் துறையூா் தனியாா் மருத்துவமனையில் பிறந்த இரண்டாவது குழந்தையைக் காண சென்ற ராஜசேகரன் பைக்கில் தன் மகனை அழைத்துச் சென்றாா். கீழப்பட்டியிலுள்ள தனது அக்கா வீட்டில் தன் மகனை விட்டு வர கரட்டாம்பட்டி - திண்ணனூா் சாலையில் சென்றபோது திண்ணனூரைச் சோ்ந்த அமா்நாத் (19) வந்த பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட புகழ்ஹா்சன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த புலிவலம் போலீஸாா் சிறுவனின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.