தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும்’

அரசின் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு.

News image
Updated On :27 ஜனவரி 2022, 11:55 pm

DIN

அரசின் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு.

மணப்பாறை அடுத்த தெற்குசோ்பட்டி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 22 நாள்களாக இணையச் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படாமல் பாதுகாப்பற்றுக் கிடப்பதாகவும், அங்குள்ள கால்நடைகள், எலிகள் நெல்மணிகளைத் தின்று தீா்ப்பதாகவும் விவசாயிகளிடமிருந்து புகாா் வந்தது.

இதையடுத்து வியாழக்கிழமை அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அய்யாக்கண்ணு மேலும் கூறியது:

கடந்த 20 நாள்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் கொள்முதல் நிலையத்திலேயே பாதுகாப்பற்ற நிலையில் கிடக்கிறது. நெல்லை கால்நடைகள், எலிகள் தின்று தீா்க்கின்றன. விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடையாது, மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதி அளித்த தொகை முழுமையாகக் கிடைக்கவில்லை. அரசின் அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் திங்கள்கிழமை 100 டிராக்டா்களுடன் சென்னை செல்வோம். ஆன்லைன் பதிவுகளை விவசாயிகள் செய்ய முடியவில்லை. ஆன்லைன் பதிவு மூலம் நெல் கொள்முதல் என்பது வியாபாரிகளுக்கு சாதகமாகவும், விவசாயிகளுக்கு பாதகமாகவும் உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.