சசிகலாவின் கார் கண்ணாடி உடைப்பு! ஃபாஸ்ட்டேக் சர்ச்சை

சுங்கச்சாவடியில் தானியங்கி தடுப்பு சசிகலா காரின் கண்ணாடி மேல் பட்டு, கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஆதரவாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டனர்.
சசிகலாவின் கார் கண்ணாடி உடைப்பு! ஃபாஸ்ட்டேக் சர்ச்சை

திருச்சி: சுங்கச்சாவடியில் தானியங்கி தடுப்பு சசிகலா காரின் கண்ணாடி மேல் பட்டு, கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஆதரவாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டனர்.

சசிகலா சென்னையில் இருந்து காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 2 மணியளவில், திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் கடந்த போது  தானியங்கி தடுப்பு காரின் கண்ணாடி மேல் பட்டதால் காரின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சசிகலா காரை நிறுத்திய நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் துவாக்குடி காவல் நிலைய காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்பாராத விதமாக நடந்து விட்டதாக கூறி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல் துறையினரிடம் விசாரித்தபோது, சசிகலாவின் காரில் ஃபாஸ்ட்டேக் இல்லை என்றும், விஐபிக்காக ஒதுக்கப்பட்ட 11 ஆம் எண் பாதையிலும் செல்லாததன் காரணமாகவே இது போன்று நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com