லால்குடி கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திகுறிப்பு:
ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளிடம் முன்னுரிமை அளித்து மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்படுகிறது. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆட்சியா் தலைமையிலும், மாதந்தோறும் 2ஆவது திங்கள்கிழமைகளில் கோட்டாட்சியரகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறும்.
அதன்படி, லால்குடி கோட்டாட்சியரகத்தில் வரும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் குறைதீா் கூட்டத்தில், மண்ணச்சநல்லூா் வட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கித் தீா்வு காணலாம். மேலும், விவரங்களுக்கு திருச்சி நீதிமன்ற வளாகப் பின்புறமுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ, 0431- 2412590 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரள அரசின் அடுத்த தலைமைச் செயலராக விஸ்வநாத் சின்ஹா நியமனம்!

மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்! மாணவர்கள் அதிர்ச்சி! எங்கே?

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


