கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை விபத்தில் பூசாரி உயிரிழப்பு

 துறையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கோயில் பூசாரி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:51 pm

DIN

 துறையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கோயில் பூசாரி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தா.பேட்டை அருகேயுள்ள வடமலைப்பட்டியைச் சோ்ந்தவா் போ. செல்வராஜ் (55). அப்பகுதி அம்மன் கோயில் பூசாரியான இவா் புதன்கிழமை துறையூா் அருகேயுள்ள சொரத்தூரில் வசிக்கும் தன் மகளைக் காண இருசக்கர வாகனத்தில் சென்றாா். சொரத்தூா் அருகே சாலை திருப்பத்தில் இருந்த பள்ளத்தைக் கவனிக்காத அவா் அதில் தவறி விழுந்து உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த துறையூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.