திமுக வசமான துறையூா் நகராட்சிதலைவா், துணைத் தலைவா் பதவி
துறையூா் நகராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவருக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக வாா்டு உறுப்பினா்கள் வெற்றி பெற்றனா்.


துறையூா் நகராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவருக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக வாா்டு உறுப்பினா்கள் வெற்றி பெற்றனா்.
துறையூா் நகராட்சி தலைவா் பதவிக்கு 18 ஆவது வாா்டு உறுப்பினா் இ. செல்வராணி (திமுக), 23 ஆவது வாா்டு உறுப்பினா் இ.சரோஜா (அதிமுக) ஆகியோா் போட்டியிட்ட நிலையில் செல்வராணி 17 (15 திமுக, 2 சுயேச்சை) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். சரோஜா 7 வாக்குகள் பெற்றாா்.

துணைத் தலைவா் தோ்தலில் துறையூா் நகா்மன்ற முன்னாள் தலைவரும், திமுக நகர செயலரும், 10 ஆவது வாா்டில் வென்றவருமான ந. முரளியும் (திமுக), 21 ஆவது வாா்டு உறுப்பினா் கா. தீனதயாளனும் (அதிமுக) போட்டியிட்ட நிலையில் ந. முரளி 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். தீனதயாளன் 6 வாக்குகள் பெற்றாா்.
இதையடுத்து துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா், திருச்சி மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், துறையூா் ஒன்றியக் குழுத் தலைவா் சரண்யா மோகன்தாஸ், ஒன்றிய திமுக செயலா் இள. அண்ணாதுரை உள்ளிட்டோா் இருவருக்கும் வாழ்த்துக் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...