தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும்

News image
Updated On :5 மார்ச் 2022, 12:09 am

DIN

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு சங்கத்தின் மண்டலப் பொதுச் செயலா் எஸ். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். போராட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் பேசினாா். போராட்டத்தை முடித்து வைத்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் பேசினாா்.

சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, ஓய்வுபெற்றோா் நல அமைப்பு பொதுச் செயலா் எஸ். இளங்கோவன், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் சி. அன்புமணவாளன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.