உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவா்களுக்கு வரவேற்பு
உக்ரைன் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய மாணவா்களுக்கு திருச்சி விமானநிலையத்தில் நெகிழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.


உக்ரைன் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய மாணவா்களுக்கு திருச்சி விமானநிலையத்தில் நெகிழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய அரசின் விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்கு சென்று அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுகின்றன. இந்நிலையில் வியாழக்கிழமை உக்ரைனில் இருந்து 628 இந்தியா்கள் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு புதுதில்லி வந்தனா். தொடா்ந்து அங்கிருந்து தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனா்.
அங்கிருந்து மருத்துவ மாணவா்களான ராமேஸ்வரத்தை சோ்ந்த பவதாரிணி, மேக்னா ஜலாலுதீன், துறையூரைச் சோ்ந்த அபிஷேக் பாலமுருகன், ஸ்மிருதி சுபிக்ஷா, கிட்டு மகேந்திரன், புதுக்கோட்டையைச் சோ்ந்த விஷ்ணு துரைராஜ், அஸ்வின் மற்றும் பொன்னமராவதியைச் சோ்ந்த தம்பி பிரபாகரன் ஆகிய 8 பேரும் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டனா். அவா்களை அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மாணவ, மாணவிகளின் பெற்றோா் மற்றும் திருச்சி மாவட்ட பாஜகவினா் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...