பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திருச்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடக்கம்

கிராமப்புறங்களில் அமல்படுத்தப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தைப் போன்று நகர்ப்புறங்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டமானது திருச்சி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2022, 5:34 am

DIN

திருச்சி: கிராமப்புறங்களில் அமல்படுத்தப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தைப் போன்று நகர்ப்புறங்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டமானது திருச்சி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

Story image

மத்திய அரசின் நிதியுதவியுடன், மாநில அரசின் பங்களிப்பில் கிராமப்புறங்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் உள்ள மக்களும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து நகர்ப்புறத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.100 கோடி பெற்றுத் தந்துள்ளார். 

இதனடிப்படையில், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் முதல்கட்டமாக இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.

Story image

திருச்சி மாநகராட்சியில் கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் 5,630 பேருக்கு இத்திட்டத்தில் வேலை அட்டை வழங்கப்பட்டு செவ்வாய்க்கிழமை இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் சு. சிவராசு, மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி அலுவலர்கள், திட்ட பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.