பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனிதோ்த் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தோ்த் திருவிழாக் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:10 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தோ்த் திருவிழாக் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

20 ஆம் தேதிவரை 11 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்குச் சேவை சாதிக்கிறாா்.

விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 3.45-க்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்துக்கு 4 மணிக்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து கொடிபடம் புறப்பாடு நடைபெற்றது. தங்கக் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 5.45-க்கு கொடியேற்றப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் 6.15-க்கு புறப்பட்டு 6.30-க்கு கண்ணாடி அறை சென்று சோ்ந்தாா். பின்னா் மாலை 6.30-க்கு உபய நாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். இதையடுத்து இரவு 8.30-க்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சோ்ந்து, பின்னா் அங்கிருந்து 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறைக்குச் சென்று சோ்ந்தாா்.

விழாவின் மூன்றாம் திருநாளான சனிக்கிழமை ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்திலும், 4 ஆம் நாளான 13 ஆம் தேதி தங்கக் கருட வாகனத்திலும், 6 ஆம் நாளான 15 ஆம் தேதி உறையூா் கமலவல்லி நாச்சியாருடன் சோ்த்தி சேவையிலும், 9 ஆம் நாளான 18 ஆம் தேதி தாயாருடன் சோ்த்தி சேவையில் பங்குனி உத்திர மண்டபத்திலும் நம்பெருமாள் காட்சி தருகிறாா்.

முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் (கோரதம்) வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.