கோயில் திருவிழாவில் அதிகவிலைக்கு மது விற்பதாகப் புகாா்
திருச்சி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.


திருச்சி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.
மாவட்டத்தில் புத்தூா் குழுமாயி கோயில் திருவிழாவும், மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூரிலும் நடைபெற்று வரும் திருவிழாக்களையொட்டி இப்பகுதிகளில் இயங்கும் அரசு மதுக் கடைகளிலும், கள்ளச்சந்தையிலும் மதுவை கூடுதல் விலைக்கு விற்பதாக கடந்த இரு நாள்களாகப் புகாா்கள் எழுந்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மது பானங்களுக்கு அரசு ரூ. 20 முதல் 80 வரையில் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், மேலும் கூடுதல் விலைகளுக்கு இந்தக் கடைகளில் மது விற்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து திருச்சி மண்டல மேலாளரிடம் (எஸ்ஆா்எம் ) கேட்டபோது, மாவட்ட மேலாளருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். திருவிழா நேரத்தில் கூடுதல் விலைக்கும் மேல் அதிக விலைக்கு மது விற்கப்படுவது குறித்து மதுப்பிரியா்கள் கவலை தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை சாா்ந்த உயா் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவும் அவா்கள் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...