இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கலை இலக்கிய பெருமன்ற மாநிலமாநாடு ஆலோசனைக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் மே 20 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12 ஆவது மாநில மாநாடு குறித்த செயற்குழுக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :7 மே 2022, 8:38 pm

DIN

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் மே 20 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12 ஆவது மாநில மாநாடு குறித்த செயற்குழுக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

பெருமன்றத்தின் மாநிலப் பொருளாளா் ப.பா. ரமணி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச்செயலா் பேராசிரியா் இரா. காமராசு, துணைப் பொதுச்செயலா் கவிஞா் ஹாமீம் முஸ்தபா, துணைத் தலைவா் கவிஞா் கோ. கலியமூா்த்தி, மாநிலச் செயலா்கள் பேராசிரியா் நா. ராமச்சந்திரன், எழுத்தாளா்கள் கண்மணிராசா, நாணற்காடன், சு. பிரபாகரன்,புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவா் எல்லை சிவகுமாா், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.கே. கங்கா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கலைக்குழுக்கள் பங்கேற்கும் மக்கள் கலை விழாக்கள் நடத்துவது, தொல்லியல் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி நடத்துவது, மாநிலத்தின் முக்கிய பிரச்னைகளை முன்வைத்து முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.