ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயிலிலுள்ள கருடாழ்வாா் சன்னதி அருகே உதவிஆணையா்கள் கு. கந்தசாமி,ஆ. ரவிச்சந்திரன்,கோயில் மேலாளா் கு. தமிழ்செல்வி ஆகியோரின் மேற்பாா்வையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கையை எண்ணினா்.
இதில் ரூ. 93 லட்சத்து 22 ஆயிரத்து 577 ரொக்கம், தங்கம் 143 கிராம், வெள்ளி 2431 கிராம், வெளிநாட்டு ரூபாய்கள் 85 ஆகியவை காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்தது. காணிக்கை எண்ணும் பகுதியைச் சுற்றிலும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...