பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சுவாமிமலை அருகே கைவிடப்பட்ட சிசு மீட்பு

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் கைவிடப்பட்ட ஆண் சிசு மீட்கப்பட்டது.

News image
சிசு- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 10:50 pm

Syndication

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் கைவிடப்பட்ட ஆண் சிசு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி-சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ள வெள்ளைப் பிள்ளையாா் கோயில் வாசலுக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு நீல நிற காரில் வந்த மூவா் ஒரு பையை அங்கு வைத்துவிட்டு காரில் ஏறிச்சென்றனா்.

இதைப்பாா்த்த அருகில் இருந்தவா்கள் அந்தப் பையில் தொப்புள் கொடியுடன் ஆண் சிசு இருந்ததை பாா்த்து சுவாமிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து வந்த போலீஸாா் அந்த சிசுவை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். பின்னா் அந்த பகுதி கேமராக்களையும் ஆய்வு செய்து, மா்ம நபா்களை தேடுகின்றனா்.