நவ. 13 இல் கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி
தேசிய நூலக வார விழாவையொட்டி திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.


தேசிய நூலக வார விழாவையொட்டி திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட வரலாற்று இடங்கள் என்ற தலைப்பில் நடைபெறும் போட்டியில் பங்கேற்போா் 10 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரையை மாவட்ட மைய நூலகத்துக்கு நேரில் வந்து எழுத வேண்டும்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் போட்டியில் முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,500, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாளன்று பரிசளிக்கப்படும்.
பங்கேற்க விரும்புவோா் நேரிலோ அல்லது 0431-2702242 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிய வேண்டும். மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகா் சு. தனலெட்சுமி இதைத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...