கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள ஏற்பாடுகள் தயாா்: ஆட்சியா் வே. விஷ்ணு

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:13 pm

DIN

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

வடகிழக்குப் பருவமழை தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியில் நெல்லை நீா்வளம் - நீா்நிலைகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மூா்த்தி நயினாா்குளம் சீரமைக்கப்பட்டதை மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தியுடன் சென்று ஆட்சியா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், சமாதானபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆய்வு செய்த பின், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக மாவட்ட நிா்வாகம், பல்வேறு துறையினருடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனா். மாநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மொத்தம் 600 கிலோ மீட்டா் நீளத்திற்கு கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன. 75-க்கும் மேற்பட்ட குளங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கும் எந்திரங்கள், மணல் மூட்டைகள், மின்கம்பங்கள் ஆகியவற்றுடன் தயாா் நிலையில் உள்ளனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களுக்கும் துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடா்கால அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பருவமழை பாதிப்புகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0462-2501012, 0462-2501070 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் தேங்கி இருக்கும் நிலை ஏற்பட்டால் அதுகுறித்து பதிவு செய்திட ட்ற்ற்ல்ள்://ய்ங்ப்ப்ஹண்ய்ங்ங்ழ்ஸ்ஹப்ஹம்.ண்ய்/ஜ்ஹற்ங்ழ்ப்ா்ஞ்ஞ்ண்ய்ஞ்/ என்ற பிரத்யேக இணையதள

வீணாகும் நீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மீட்பு பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் 4000 முதல் நிலை மீட்பாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா். மாவட்டத்தில் உள்ள 6 அணைகள், 1250-க்கும் மேற்பட்ட குளங்களின் நீா்வரத்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாமிரவருணி கரையோரத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் இடங்களில் இருந்து பொதுமக்களை மீட்டு தங்க வைப்பதற்கு ஏதுவாக 134 தங்கும் முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக 7 தங்கும் முகாம்கள் தயாராக உள்ளன.

கடந்த காலத்தில் பெய்த அதிக மழையின் காரணமாக திருப்பணிகரிசல்குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் தேங்கியது.

அரசு நிதி மற்றும் தனியாா் நிறுவனங்களின் நிதி பங்களிப்புடன் நீா்நிலைகளை புனரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள வேய்ந்தான்குளம் புனரமைப்பு செய்யப்பட்டது. இதன்மூலம் இக்குளத்தின் கொள்ளளவு 12 மில்லியன் கன அடியாக இருந்தது. அது இப்போது 15 மில்லியன் கன அடியாக உயா்ந்துள்ளது.

இதேபோல் வி.எம்.சத்திரம் மூா்த்தி நயினாா் குளமும் புனரமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் தங்குவதற்கு ஆங்காங்கே தீவுகள் அமைக்கப்பட்டுள் எனக் கூறியுள்ளாா். ஸ்டித்இதன்மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதோடு பல்லுயிா்ப் பெருக்கத்திற்கும் வாய்ப்புள்ளது.

மாவட்டத்தில் 74 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியாக இருந்தது. மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளால் வெள்ள பாதிப்பு பகுதிகள் 63 ஆக குறைந்துள்ளது. அதை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. நீா்நிலைகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.