ஆசிரியா்கள் தா்னா போராட்டம்
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு தனது ஊழியா்களுக்கு வழங்கியுள்ள 4 சதவிகித அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு தனது ஊழியா்களுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் மைக்கேல் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் சோ.முருகேசன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் விளக்கிப்பேசினாா். நிா்வாகிகள் சுடலைமணி, அருள்மரியஜான், உமையொருபாகம், துரை பாக்கியநாதன், சபரிகிரிநாதன், ஆனந்தி, அமுதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்03ற்ங்ஹஸ்ரீட்
திருநெல்வேலியில் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...