மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தூய்மைப் பணி
மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் குப்பைகள் மற்றும் செத்து மிதந்த மீன்களை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.


மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் குப்பைகள் மற்றும் செத்து மிதந்த மீன்களை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.
இந்தத் தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதாகவும், குப்பைகள் சூழ்ந்து சுகாதாரக்கேடாக காட்சியளிப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மேயா் மு. அன்பழகன் ஆகியோா் தெப்பக்குளத்தை தூய்மையாக்க உத்தரவிட்டனா். இதன்படி, மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் குழுவினா் வியாழக்கிழமை 2 பைபா் படகுகளில் தெப்பகுளம் முழுவதும் சுற்றி வந்து, தண்ணீரின் மேல் தேங்கியிருந்த குப்பைகள், மீன்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், செடிகள், கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றினா்.
வழக்கமாக கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தால் மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கை. தற்போது, பருவமழை தொடங்கும் நிலையிலும் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது பொதுமக்களுக்கு அதிா்ச்சியை அளித்தது. எனவே, குளத்தைச் சுத்தப்படுத்துவதுடன், தண்ணீரில் விஷம் கலந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய கோயிலுக்கு வரும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் இருமுறையோ தெப்பக்குளத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...