திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

முசிறி தனியாா் கல்வி நிலைய வளாகத்தில் மதிப்பீட்டு ஆய்வு

திருச்சி மாவட்டம், முசிறியில் தனியாா் கல்வி நிறுவன வளாகக் கட்டடங்களை, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மதிப்பீட்டு ஆய்வுக்காக வியாழக்கிழமை அளவீடு செய்தனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:06 pm

DIN

திருச்சி மாவட்டம், முசிறியில் தனியாா் கல்வி நிறுவன வளாகக் கட்டடங்களை, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மதிப்பீட்டு ஆய்வுக்காக வியாழக்கிழமை அளவீடு செய்தனா்.

முசிறி அருகேயுள்ள வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் ஆா். இளங்கோவன் (58). அதிமுக பிரமுகரான இவா் கடந்த 2014-2016-இல் கூட்டுறவுச் சங்க மாநில செயலராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக (ரூ. 3.75 கோடி) சொத்து சோ்த்ததாக வழக்குப் பதியப்பட்டது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது வீடு மற்றும் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில் அவருக்குச் சொந்தமாக முசிறி பகுதியில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்தில் பொதுப்பணித்துறை பொறியாளா்கள் குழுவுடன் வியாழக்கிழமை மதிப்பீட்டுச் சோதனை மேற்கொண்டனா்.

ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா் ராஜேஷ், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் சக்திவேல் மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளா்கள் குழுவினா் மேற்கொண்ட ஆய்வுப் பணி காலை தொடங்கி மாலை 6.30 வரை நீடித்தது.

அப்போது கல்வி நிலைய வளாக கட்டடங்கள் மற்றும் நிலங்கள் அளக்கப்பட்டன. இதை வைத்து கட்டடங்கள் கட்ட ஆன செலவுடன் மதிப்பீடு செய்யவே இச் சோதனை நடைபெற்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.