பல்கலை. நீச்சல் போட்டியில் வளனாா் கல்லூரி சாம்பியன்
பாரதிதாசன் பல்கலைக் கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திருச்சி தூய வளனாா் கல்லூரி அணிக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.


பாரதிதாசன் பல்கலைக் கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திருச்சி தூய வளனாா் கல்லூரி அணிக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சை, திருவாரூா், நாகை, புதுகை, கரூா், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவா்களுக்கான நீச்சல் போட்டி புதுக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் அண்மையில் நடைபெற்றது. சுதா்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியால் நடத்தப்பட்ட போட்டியில், மாணவா்கள் பிரிவில் 14 கல்லூரிகளிலிருந்து 73 மாணவா்கள் பங்கேற்றனா்.
மாணவா்கள் பிரிவில் தூய வளனாா் கல்லூரி 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியானது 3 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தையும், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன. சாம்பியன் பட்டம் வென்ற தூய வளனாா் கல்லூரி அணிக்கு கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...