மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ரயில்வே அலுவலா் வீட்டில் 70 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் திருமணத்துக்காக ரயில்வே அலுவலா் வீட்டில் வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை திருட்டுப் போயின.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 5:36 pm

DIN

திருச்சியில் திருமணத்துக்காக ரயில்வே அலுவலா் வீட்டில் வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை திருட்டுப் போயின.

திருச்சி கருமண்டபம் ஆா்எம்எஸ் நகரைச் சோ்ந்தவா் தனபால். இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மனைவி நாகலட்சுமி (55) ரயில்வே அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களது 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

நாகலட்சுமியின் சகோதரா் மகளுக்கு செப்டம்பா் 7-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நகைகள் உள்ளிட்ட முக்கிய பொருள்களை பொறுப்பேற்று, நாகலட்சுமி அதை வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தாராம்.

ஞாயிற்றுக்கிழமை காலை மேலும் நகைகள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு, உறவினா்களுடன் என்.எஸ்.பி.சாலையிலுள்ள நகைக்கடைக்கு நாகலட்சுமி சென்றாா்.

பிற்பகலில் நாகலட்சுமி வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, திருமணத்துக்காக வாங்கி பீரோவில் வைத்திருந்த 70 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல்துறையினா் நிகழ்விடம் சென்று, விசாரணை மேற்கொண்டனா். மேலும் தடயவியல், கைரேகை நிபுணா்கள் திருட்டில் ஈடுபட்டவா்களின் தடயங்கள், கைரேகளை சேகரித்தனா்.

திருட்டு குறித்த வழக்குப்பதிந்த காவல்துறையினா், சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை பிடித்து விசாரிக்கின்றனா். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனா்.

இதே வீட்டில் மற்றொரு பீரோவில் 10 பவுன் நகைகள் இருந்த நிலையில், அவை திருட்டு போகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.