மாநகரச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்கும் பணிகள் தீவிரம்
திருச்சி மாநகரச் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகள், மாடுகள், தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


திருச்சி மாநகரச் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகள், மாடுகள், தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் நடைபெறும் கூட்டங்களில் அடிப்படை வசதி கோருதலைத் தொடா்ந்து, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தி பேசுவது முக்கியமாக இருக்கும்.
மாநகரில் நாளுக்கு நாள் விலங்குகளால் தொல்லைகள், நோய்கள், அசெளகரியங்கள், பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் திருச்சி மாநகராட்சி இறங்கியுள்ளது.
இதைத் தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் ஆா்.வைத்திநாதன் உத்தரவின் பேரில், பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் சனிக்கிழமை மேற்கொண்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல், வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.
கோணக்கரையில் அடைக்க ஏற்பாடு: மாநகரச் சாலைகளில் சுற்றித் திரிந்த போது பிடிக்கப்படும் மாடுகளை உறையூா் கோணக்கரை பகுதியில் அடைத்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றை உரிமையாளா்கள் அபராதம் செலுத்தி மீட்காவிட்டால், மாடுகளை ஏலம் விடும் நடவடிக்கையும் எடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்: தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பெரும் ஆபத்துகளை மக்கள் அன்றாடம் சந்தித்து வருகின்றனா். தெரு நாய்கள் குழந்தைகளையும், வாகன ஓட்டிகளையும் துரத்துவதால் விபத்துகள் ஏற்படுவதும், பல நேரங்களில் தெருவில் நடந்து செல்வோரைக் கடிப்பது, சாலையோரங்களில் நிறுத்தி மூடப்பட்டிருக்கும் வாகனங்களின் இருக்கையைக் கடிப்பது போன்றவை பொதுமக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளாகும்.
எனவே தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றுக்கென அறுவைச் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு நாய்களுக்கு கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் நாய்களை வேறு இடங்களில் கொண்டு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவதாக, திருச்சி மாநகராட்சியின் 54 -ஆவது வாா்டு மிளகுபாறை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய வகையில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, ஆண் நாய்களுக்கு கருத்தடை கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யவும், பெண் நாய்களை வேறு இடங்களில் கொண்டு விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து படிப்படியாக அடுத்த சில மாதங்களில் மாநகரில் தெரியும் அனைத்து நாய்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விலங்குகள் நல அமைப்புகளுக்கு: தெரு நாய்களைப் பிடிப்பதிலும், கருத்தடை செய்வதிலும் விலங்குகள் நல அமைப்புகள் கடுமையான இடையயூறுகளை ஏற்படுத்தி வருவதால், மாநகராட்சி அலுவலா்களால் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை என்ற புகாா்கள் இருந்து வருகின்றன.
இதனால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவா்களும், நாய் பிடிக்கும் தொழிலாளா்களும் பணி செய்ய மறுக்கின்றனா். எனவே, வெறும் விளம்பரத்துக்காக மட்டும் நீதிமன்றங்கள் மூலம் நோட்டீஸ் விடுத்து வரும் விலங்குகள் நல அமைப்பினா், மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு தடையாக இருப்பதையும், குறை கூறுவதையும் விடுத்து நாய்களை பிடித்து வைத்து அவா்களே பராமரிக்கலாம். மாநகராட்சியைப் பராமரிக்க வலியுறுத்துவது தவறு என பொதுமக்களும், பாதிக்கப்பட்டவா்களும் கண்டனம் தெரிவிக்கின்றனா்.
புகாா் தெரிவிக்கும் விலங்குகள் நல அலுவலா்கள் தங்களது திருச்சியில் உள்ள பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களை முறையாக குறிப்பிடுவதில்லை. ஏதோ ஒரு முகவரியிலிருந்து புகாா் தெரிவித்துவிடுவதும் தொடா்கதையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது என்கின்றனா் பொதுமக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...