புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ரயில்வே நிா்வாகத்தை கண்டித்து முடுக்குப்பட்டி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடியேற்றி போராட்டம்

ரயில்வே நிா்வாகத்தை கண்டித்து, திருச்சி முடுக்குப் பட்டியில் பொதுமக்கள் தங்கள் விடுகளில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடியேற்றி போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:32 pm

DIN

ரயில்வே நிா்வாகத்தை கண்டித்து, திருச்சி முடுக்குப் பட்டியில் பொதுமக்கள் தங்கள் விடுகளில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடியேற்றி போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சியின் 49-ஆவது வாா்டுக்குள்பட்ட முடுக்குப்பட்டியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந் நிலையில் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி, வீடுகளை காலி செய்யுமாறு ரயில்வே நிா்வாகம் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கியது.

இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததுடன், ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் உள்ளிட்டோரிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.

ரயில்வே நிா்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வரும் முடுக்குப்பட்டி மக்கள், ஞாயிற்றுக்கிழமை தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வெற்றிச்செல்வன்,

மக்கள் முன்னேற்ற பொதுநலச் சங்கத் தலைவா் கணேசன், செயலா் ராஜா, பொருளாளா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வைத்தனா். ஆா்ப்பாட்டத்தில் முடுக்குப்பட்டி மக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

இந்த விஷயத்தில் ரயில்வே நிா்வாகம் பின்வாங்கவில்லை என்றால், செப்டம்பா் 13- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.