மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது
திருச்சி மாநகராட்சியின் குறிப்பிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(செப்.13) குடிநீா் விநியோகம் இருக்காது.


திருச்சி மாநகராட்சியின் குறிப்பிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(செப்.13) குடிநீா் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்ரீரங்கம் பகுதியில் பராமரிப்புகளுக்காக மின் விநியோகம் செவ்வாய்க்கிழமை தடை செய்யப்படுகிறது. இதனால் மேலூா் ஆண்டவா் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீா் சேகரிப்புக் கிணறுகள்1,2,3, மற்றும் தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி, ஆளவந்தான் படித்துறை நீா் சேகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றிலும் மின்சாரம் இருக்காது.
இதன் காரணமாக ஸ்ரீரங்கம் பகுதிகள், சஞ்சீவிநகா், தேவதானம், விறகுப்பேடைட, மகாலக்ஷ்மிநகா் நேருஜி நகா், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகா், ரயில் நகா், செந்தண்ணீா்புரம், சங்கிலியாண்டபுரம், ராணுவத்தினா் காலனி, விவேகானந்த நகா், ஜே.கே நகா், மேலக்கல்கண்டாா் கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம்,
காமராஜ் நகா், செம்பட்டு, காஜாநகா், காஜாமலை, கே.சாத்தனூா், கே.கே.நகா், தென்றல்நகா், ஆனந்த்நகா், சத்தியவானி முத்துநகா், அய்யப்பநகா்.
உறையூா், மங்களாநகா், பாத்திமாநகா், சிவாநகா், ரெயின்போ நகா், செல்வா நகா், ஆனந்தம் நகா், பாரதிநகா், புத்தூா்பகுதி, எடமலை பட்டிப்புதூா், அன்பு நகா், கிருஷ்ணமூா்த்தி நகா், தொண்டைமான் நகா், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...