காட்டுப்புத்தூா் பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 14th April 2022 01:44 AM | Last Updated : 14th April 2022 01:44 AM | அ+அ அ- |

காட்டுப்புத்தூா் அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காவிரியிலிருந்து புனிதநீா் எடுத்து வரப்பட்டு, யாகசாலையில் வைத்து பல்வேறு யாக வேள்விகள், பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து புதன்கிழமை கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி, குடமுழுக்கு நடத்தப்பட்டது.
பின்னா் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. காட்டுப்புத்தூா் பேரூராட்சி உறுப்பினா் மாலதி, கே.டி.எஸ்.செல்வம் மற்றும் பொதுமக்கள் குடமுழுக்கில் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G