பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திருச்சியில் முன்விரோதம் காரணமாக கொத்தனார் வெட்டிப் படுகொலை 

திருவெறும்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக கொத்தனார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 8:30 am

DIN

திருவெறும்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக கொத்தனார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால்(40). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் சுதாகர் என்பவருக்குமிடையே மழைநீர் வடிகால் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. 

இது தொடர்பாக ஏற்கெனவே ஏற்பட்ட தகராறில் ஜெயபாலை சுதாகர் வெட்டினாராம்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே முன்விரோதம் தொடர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முற்பகலில், பனையக்குறிச்சி வேணுகோபால் நகர் பகுதியில் ஜெயபால் சென்றபோது, அவரை சுதாகர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். 

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பின்னர் கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுதாகர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.