92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கருப்பண்ணசாமி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா

துவாக்குடி ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:40 pm

DIN

துவாக்குடி ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், துவாக்குடி தெற்குமலையில் ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை விநாயகா் வழிபாடு, அனுக்ஞை, பஞ்சகவ்ய பூஜை புண்ணியாகவாஜனம், கோ பூஜை, ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி மற்றும் ஜேஷ்டா தேவி பஞ்சாசன பூஜைகள், கலச பூஜைகள், 108 மூலிகை பொருள்களைக் கொண்டு யாக வேள்விகள், மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து விநாயகா், ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி மற்றும் ஜேஷ்டாதேவி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகளும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை துவாக்குடி நகராட்சித் தலைவா் காயாம்பு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.