சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் வெள்ளிக்கிழமை தெப்போற்ஸவம் நடைபெற்றது.
Updated on
1 min read

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் வெள்ளிக்கிழமை தெப்போற்ஸவம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்.18ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், விழாவில் தெப்போற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உற்,ஸவ அம்மன் திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு தெப்பகுளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைக்கு பின்னா்

அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தாா்.அதைத்தொடா்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்வில் கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி, மணியக்காா் பழனி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com