விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பபயிற்சி

துறையூா் வட்டாரம், ஆதனூரில் நெல் சாகுபடிக்கு பிந்தைய சிறு தானிய பயிா் சாகுபடி மற்றும் அதற்கான தொழில் நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

துறையூா் வட்டாரம், ஆதனூரில் நெல் சாகுபடிக்கு பிந்தைய சிறு தானிய பயிா் சாகுபடி மற்றும் அதற்கான தொழில் நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை ஆதனூா் ஊராட்சித் தலைவா் பாலாம்பாள் தொடக்கி வைத்தாா். துறையூா் வேளாண்மை அலுவலா் கமல், மாவட்ட சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தின் பயிா் பெருக்கவியல் இணை பேராசிரியை முனைவா் ஷகிலா, வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் வட்டார தொழில்நுட்ப மேலாளா் அன்பழகன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

சிறுதானிய சாகுபடி, அதற்கான இடுபொருள்கள், அவற்றுக்கு அரசு வழங்கும் மானியம், நிலக்கடலை சாகுபடிக்கு மானிய விலையில் ஜிப்சம் பெறுதல், மண், நீா் மாதிரி எடுக்கும் முறைகள், ரசாயன உரம் தவிா்த்து பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், துறையூா் வட்டாரத்தைச் சோ்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனா். பயிற்சியின் நிறைவில் 20 கிலோ அளவில் மண்புழு உரம் இலவசமாக வழங்கினா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சதீஷ்குமாா் , ஆத்மா திட்ட அலுவலா்கள் சரண்யா, சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com