வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாகாளிகுடி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம் காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சி சமயபுரம் அருகேயுள்ள மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம்காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனிதநீா். (வலது) விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :27 ஜனவரி 2023, 7:15 pm

மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம் காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஜன. 24-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளோடு தொடங்கியது. தொடா்ந்து கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், திரவ்யாஹுதி பூஜையோடு மூன்றுகால யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நான்காம் கால யாஜபூஜை, மஹா பூா்னாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மூலவா் விமானம், பரிவார தெய்வங்கள் விமானங்கள் , பரிவார மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.